ஆறோடும் நீரோடும்: ரீகன். ஜெயக்குமார்

பட்டம் பெற்றோரெல்லாம்
பட்டினம் நோக்கிப் படைஎடுத்து
படிப்பிற்க்கேற்ற வேலை கேட்பார்
வேலைக்கேற்ற வெகுமதி கேட்பார்

வெகுமதிக்கேற்ற வீடு கேட்பார்
வீட்டிற்கேற்ற பெண் கேட்பார்
பெண்ணிற்கேற்ற பொன் கேட்பார்

தனக்கென வட்டமிட்டு
வட்டத்துக்குள் திட்டமிட்டு
திட்டத்துக்குள்ளே கொட்ட மிட்டு

தற்பெருமையை தனதாக்கிக்கொள்வார்
ஆனால் பாமரனோ
கிடைத்த வேலையை செய்து

கொடுத்த கூலியை பெற்று
அடுத்த வேலை உணவிற்க்கு
உழைப்பை உறுதுனையாக்கி

எருது கூட்டி ஏரு பூட்டி ஏரோடும்
சேரோடும் நீரோடும் ஆறோடும் ஊரோடும்
வேரோடும் பயிரோடு போராடி

ஒட்டிய வயிறும் கட்டிய கோவனமுமாய்
உடுத்த உடையின்றி உண்ண உணவின்றி

பட்டினியை பரிசாக பெறுவது
படிப்பாளியின் பசியைப்போக்க
விண்ணை நம்பி மண்ணை பொன்னாக்கி

மரணத்திடம் மண்டியிடும்
மகான்களை கண்டு ரசிக்கிறோம்

அவர்தம் உணவை ருசிக்கிறோம்
பாமரனே இன்றைய சமுதாயத்தினை
காக்கப்பட வேண்டிய கண்ணாடி

என்பதை படித்தவர் மத்தியில்
எடுத்துரைத்தால் பரிவட்டம் கட்ட மாட்டார்
இருப்பினும் எடுத்துரைப்பது என் கடமை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com