ஆறோடும் பாதை – இன்று,
கார் ஒடும், தார் ரோடானதே.
நீரோடும் பாதை – இன்று,
ஊராகிப்போனதே, வீடாகிப்போனதே,
வீணாகிப்போனதே..
பார்போற்றும், பூமி நம் தமிழ் பூமியடா.
யார் வந்தாலும், ஏற்றுக்கொள்வது, தமிழ்சாதியடா..
விளை நிலத்தில், வீடுகளை விதைக்காமல்,
ஆறோடும் நீரோடும் பாதைகளை, வளைக்காமல்,
நம்மை நாமே, சுத்திகரிப்போம்.
ஆறோடும் பாதை நீரோடும் பாதைகளை,
தடுப்பாரை, சுட்டெறிப்போம்…