ஆறோடும் நீரோடும்: ௧விஞர் மா.உலகநாதன்,

அன்று.....
ஆறோடும் நீரோடும்,
ஊரோடும் தேரோடும்;
உழைத்துப் பிழைத்தனர்,
உவகையோடு வாழ்ந்தனர்;
உண்ணும் சோறும் பருகும்நீரும் அவர்தம்
வியர்வை  முத்துகள்;ஆனால்,
இன்று...
பிழைக்கவே உழைக்கிறார்கள்;
உதாரணத்திற்கு ஒன்று.
ஊறு செய்யும் நூறு நாள் வேலை;
ஆடவர் தோள் சுமந்த மண்வெட்டி,
பெண்டிர் கைகளுக்கு இடம் மாறியது;
அன்றாடம் கூடினர்,குழுமினர்;
ஆற அமர்ந்தனர்;
ஊர்க்கதைகளைப் பேசியே 
ஊதியம் பெற்று வாழ்கின்றார்!
உழைப்பு எனும் ஊற்றுக்கண்
திறந்தால்தான் வாழ்வெனும்
ஆற்றில் செழிப்பு எனும் நீரோடும்;
நம் தேர் ஓடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com