நீர் வற்றிய குளம்: சீர்காழி .ஆர் .சீதாராமன்

"எங்கே போனது தவளையின்
சத்தம் , மீன்களின் துள்ளல்
தண்ணீர் பாம்புகளின் பாய்ச்சல்
கழுகுகளின் கூட்டம் 
கொக்குகளின் நடமாட்டம் "

"பாலம் பாலமாய் வெடித்து
அமங்கலியாய் ஏமாற்றம்
முகப்புண். கொண்ட     
தோற்றம் நீர் வற்றிய    
குளம் அழுமுகமாக" 

"பரந்து விரிந்த நீர் சோலை பகுதி 
வறண்டு போய் இன்று
குழந்தைகள் விளையாடும்
மைதானமாகி விட்டது  நீர்
வற்றிய குளம் கேள்விக் குறியாக 
எதிர்காலத் தேடலாக "

" நீர் இருந்த போது இளமையும்  
துள்ளளும் அலையும் சத்தமும்
துடிப்பும் பசுமையும்  ஈர்ப்பும்,
பட்டமரமாய் காய்ந்து முதுமை
கோலமாய் நீர் வற்றிய குளம் "

" பச்சை பாசி  படிந்தாலும் நீர் 
   குறைந்தாலும் அதுவும் ஒரு
  தனி அழகு , வேர் சாய்ந்த
  மரம் போல யாரும் சீண்டா
  எட்டாக்    கனியாய்  நீர்  
   வற்றிய   குளம்   இன்று "

" வானமங்கையை   வேண்டி
  நீர் வரவை கூட்டி பசுமையை
  பரப்பி  அழகை     மீட்டு
  உயிரோட்டத்தை   காட்டி
  வற்றாத ஜிவ நதி போல்
  மாற்றுவோம்   வாரீர் வாரீர் "

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com