குழந்தையின் குரல்:  -ரெத்தின.ஆத்மநாதன்

குழந்தையின் குரலொன்று குதூகலமாய்க் கேட்கிறது'ஆராரோ     ஆரிரரோ '    அம்மாவும்     பாடாமலே'மாமாவும் அடித்தாரோ மல்லிகைப் பூச் சென்டாலே'என்று நீளும் பாட்டியின் குரலும் எங்கணுமே கேட்காமலே'யூ டியூப்'பில் வைத்த பாட்டு ஒவ்வொன்றாய் மாறிப் பாடதொட்டிலிலே குழந்தை தூங்காமல் அதைக் கேட்கும்!அன்னை   அரவணைப்பில்     அயராத   தாலாட்டில்'பண்'ணோடு    பாடும்    பலவகைப்  பாட்டின்றி 'லேப் டாப்'பில்   'ஐ பேடி'ல்   லாவக   'டாப்லட்'டில்யார்பாடும் பாடலையோ இக்குழந்தை கேட்டுறங்கவிழித்தெழுந்து விளையாடி விபரத்தை அது அறிந்து நன்றாக வளர்கையிலே நம்பெற்றோரை மறந்திடுதே!குழந்தையை நித்தமுமே கொஞ்சிக் குலவ வேண்டும்பிஞ்சாய் இருக்கும்வரை பேண வேண்டும் கண்ணில்வைத்துபஞ்சாய்   அதனையே   பாவித்துப்    பதவிசாய்ச்   சீராட்டிஅதற்குக்  கதை  சொல்லி  அது  சொல்லும்   கதைகேட்டுநன்றாய்   அது வளர    நாளெல்லாம்    நற்   தவமிருந்து பாதுகாத்து வளர்த்தாலே பின்னாளில் பாசத்தை அது நல்கும்!முலைப்பால் தனைத் தவிர்த்து முழுதும் புட்டிப் பாலிலேயேபிள்ளையை   வளர்த்தாலது பெரியவன்    ஆன   பின்னால்சொந்தமா கொண்டாடும்?    சொந்தக் காரங்களைக்கூடஅந்நியமாய்த் தான் நினைக்கும்!அன்னையையும் அவமதிக்கும்!பின்னாளின் நிகழ்வுகளைப் பெற்றோரே தீர்மானிக்கின்றனர்என்றே     சொன்னால்     எப்படி    அது    தவறாகும் ? அன்பைச்   சொறியுங்கள்!   அரவணைத்துச்  செல்லுங்கள்!பண்பைக்    குழைத்தென்றும்    பக்குவமாய்     வாழுங்கள்!உங்கள்     செயல்களையே     உம் குழந்தை     கவனிப்பர்!அவர் முன்னே   குடிக்காதீர்!     ஆழ்ந்து புகை இழுக்காதீர்!உண்மையே பேசி ஊராரை மதித்தொழுகி நல்லதே செய்தால்நமக்கில்லை  பின்னாளில்   நலி   முதியோர்    இல்லம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com