குழந்தையின் குரல்: மீனாள் தேவராஜன்

அன்பொலி ஆனந்தவொலி இதயவொலி
ஈடில்லொலி உயிரொலி ஊக்கவொலி
என்றும் ஏதமில் ஐம்புலன் ஒலிக்கும்
ஈன்றாளுக்கு உலகுதித்தசிசுவொலி
இன்னொலி இசையொலி இங்கிதவொலி
பண்ணொலி பாட்டொலி பறையொலி
மண்ணில் மழலையொலி மயக்கொலி
மானிடத்திற்குக் குழவி சிரிப்பொலி
பெற்றார் பெறாதார் உற்றார் உறவிலார்
கற்றார் கல்லார் கன்னெஞ்சங்கொண்டார்
உள்ளங்கடலில் இன்பத்தீ மூழச்செய்யும்
கள்ளங்கபடில்லாக்குழந்தை குரல்.
வீணைபாலா தந்த இசையொலி இனிமை
வீணைக்குரல் எம்.எஸ் இசையொலி இனிமை
குன்றக்குடி வயலின் வாசிப்பொலி இனிமை
குழந்தை குரல் அதனினும் இனிமை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com