குளிர் வான் நிலவே
குழந்தைக்கு சோறூட்ட
கவிஞருக்கு கவியூட்ட
காதலனுக்கு ஆர்வமூட்ட
உலகுக்கு வெளிச்சமூட்ட
மனிதரைத் தாலாட்ட
தம்பதியருக்கு தேனிலவை நினைவூட்ட
முகத்தில் பரவசமூட்ட
முற்றத்தில் விளையாட
மேகத்தில் கரைந்த நிலவே
விரைந்து ஓடி வருவாய்