மேகத்தில் கரைந்த நிலா - செந்தில்குமார் சுப்பிரமணியன்

கரைதலும் - காணாமல் போதலும் காதலில் மட்டுமல்லாது - நிலவிலும் நிகழ்கிறது.காத்திருத்தலுக்கும் - கரம் பிடித்தலுக்கு மான கால இடைவெளியூடே கணக்கற்றகார்முகில்கள் சுற்றி வளைத்து நிலவைச்சிறைபிடிக்க நிலா - சுற்றத்தாரோடு - முற்றத்தில் நட்சத்திரங்களை வைத்து  ஆடும்  ஆடு - புலி ஆட்டம் - பகடைக் காயான காதல் மொழிகள், தேய்ந்து - வளர்ந்து மாறும்  உருவாய் தினமும் நினைவில் கரைந்து - உருகமறைந்த மனிதத்தில்வரைந்த சிற்பமாய்முகிலும் - நிலவும்எண்ண வெளியில் ஆடும்கண்ணாமூச்சி -கண்ணா -கண்ணா ரே- ரேஉண்ணாது ஓடி வாஉன் நினைவை எடுத்து போ.கொல - கொலயா முந்திரிக்காநெறய நெறய சுற்றி வாகொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?கூட்டத்தில் இல்லை - கண்டு தெளி. இவ்வித நிலவொளி ஆட்டங்களின் நினைவலைகளில் நித்தம் நீந்தி - வருந்தி இருக்கும்சிலபோது - சருகான மனம் சிறகாகும் உன் மின்னல் பார்வையால்,எண்ணு முன்னே, என் முன் வந்து - கால வெளியில் என் வானில் கலந்திட, கரம் சேர்க்க வரம் தருவாயா -அறம் சொல்லும் எம் இறையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com