மேகத்தில் கரைந்த நிலா:  ரீகன். ஜெய்குமார்

கரையோர மரங்களும்
கனத்த பனியும்,
நீண்ட இருளில்
எனக்கான கவிதைகளை
போர்த்தி சென்றன............

தூர நிலா வெளிச்சம்
பனிச்சாரலில்
என்னையும் நனைத்து
தரைப் புல்லில்
புணர்ச்சி கொண்டு.
ஊடலின் அடையாளமாக
நீர்த்துளிகளை
பிரசவித்து
மரணித்து மறைகிறது......

ஓடைப்புல்லின் ஓரம்
சாடைப் பேசிய நினைவுகளில்
தாடை நனைய
கண்ணீரில் கரைந்த
கவிதை வடுக்கள்
பதிந்து கொண்டன
அக நூல் புத்தகத்தில்.....

கறை கொண்ட நிலா,
கரையில்லா என் கவலைகளை
திரையில்லா தனிமையில்
உரை எழுத , இயலாமல்
தரை குனி்ந்து மேகத்தில்
பிறை நிலவாய் சோகத்தில்
கரைந்து,
என்னை எட்டி பார்த்து
தள்ளி செல்கின்றாள்.....

ஒரு துன்பவியல் பயணத்தில்
இளைப்பாறுகிறேன்
துன்ப நினைவுகளைக் கொண்டு.
இங்கு முகநூல் புத்தகம்
அவளும் நானும் என்று
புதுக்கவிதை புத்தமாய் மாற.
என் புதிர் நிறைந்த
வாழ்க்கைப் புத்தகத்தில்
பயணிக்கிறேன்.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com