மேகத்தில் கரைந்த நிலா: கவிஞர் ராம்க்ருஷ்

நீலவான ஓடையில் தடையின்றி நீந்திய நிலாஓலமிடும் காற்றையும் தென்றலாய் மாற்றியேகூல வாணிகனாய் போட்டியின்றி கடைவிரித்ததுகாலம் மாறும் காட்சிகள் மாறும் என்றறியாமலேவானம் மறைக்காத வெண் மேகங்களின் ஓட்டம்ஊனமின்றி வானத்தைக் கழுவி நீலமாக்கியதுகானம் பாடி நிலவும் தனித்துவ ஒளி வீசியதேஞானம் வந்த பருவம் சூழல் மாற்ற எண்ணியதேவெண் மேகங்கள் மெல்லப் பெருகி வான் நிறையகண்ணும் கருத்துமாய் அவை சூல் கொண்டனவேவிண்ணில் அவை கருமை நிறமாய் மாறினவேஎண்ணிலடங்கா அவை ஒன்றோடொன்று மோதினஇடி முழக்கம் வானதிர எங்கும் மின்னல்களாயினதுடிப்பாக எட்டிப் பார்க்க விரும்பிய நிலவினுக்குஅடியும் தெரியவில்லை முடியும் புரியவில்லையேபடிப்படியாய் நிலா மேகத்தில் கரைந்து போனதோமழை இழையிழையாய்ப் பெய்யத் தொடங்கியதேபிழையின்றி கருமுகில்கள் செய்த உழைப்பல்லவாதழை செடி மண் என எல்லாமே நீரில் நனைந்தனவேஅழையாத விருந்தாய் நிலவும் மேகத்தில் கரைந்ததே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com