புதிய ஓட்டம் : ஆகர்ஷிணி

ஒவ்வொரு பருவத்திலும் ஓர் புதிய ஓட்டம்கருவாக்கும் முன் பந்தயத்தில் ஓட்டம்கருவறைக்குள் வளர்ச்சிக்காய் ஓட்டம்கருவறையிலிருந்து வெளிவரும் முன் ஓர் ஓட்டம்வெளிவந்தபின் தவழ்கையில் கை, கால்களால் ஓட்டம் ஒரு வயதில் இருந்து இருகால்களால் ஓட்டம் பள்ளிக்கு செல்கையில் நேரத்தோடு ஒரு ஓட்டம் உயர்வகுப்பில் மதிப்பெண்ணுக்காக  ஓட்டம் கல்லூரிக்காலத்தில் வேலையை முன்னெடுத்து ஓட்டம் பின்  வேலைக்காக நேர்காணலுக்கு ஓட்டம் வேலை கிடைத்தபின் தக்கவைக்க இலக்குக்காக ஓட்டம் திருமண பந்தத்துக்காக தேடல் ஓட்டம் மணமேடைக்குப்பின் மழலைக்காக ஓட்டம்பிறக்கா விட்டால் மருத்துவத்துக்காக ஓட்டம் கோவில் கோவிலாக பிள்ளை வரம் தேடி ஓட்டம்  பிறந்து விட்டால் அதன் நலனுக்காக ஓட்டம் செல்வம் சேர்க்க ஓட்டம், அதன் வளர்ச்சிக்காக ஓட்டம் .....கருவறை முதல்  கல்லறை  வரையில்  புதுப்புது நோக்கங்களுக்காக  புதிய ஓட்டங்கள் ...உடலில் ரத்த  ஓட்டம்  இருக்கும்  வரை..... புதிய  ஓட்டம்  அடுத்த  இலக்கை  நோக்கியே!..வாழ்க்கையை  ரசித்து  வாழ நினைக்கும் வேளையில் காலம் முடிந்து அல்லது கடந்து போய் விடுகிறது ...வாழ்க்கையை ரசித்து வாழாமல் உடலை விட்டு கடைசியாய் ஆன்மாவின் புதிய ஓட்டம்...கடவுள் ஒவ்வொரு உயிரையும் அதனைஇங்கு வாழவே அனுப்பியிருக்கிறார்!..மனிதனையும், தான் வாழாமல், பிறரை மட்டுமே வாழ வைக்க அல்ல...தான் மட்டுமே வாழவும் அல்ல.. தானும் வாழ்ந்து, அதில் பிற உயிர்களையும் வாழ வைக்கவே.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com