புதிய ஓட்டம் : சுஜாதா ஜெயராமன்

வாழ்க்கையில் என்றுமே ஓட்டம்தான்..வெற்றி தோல்வி என்பதில்லை.. வெறும் ஓட்டம்தான்உயிர், உடல்கூட்டைவிட்டு ஓடும் வரைவாழும் உயிர் அத்தனைக்கும் ஓட்டம்தான் வாழ்க்கை..உணவுக்கும் உயிர் பிழைத்தலுக்கான ஓட்டமே அத்தனை உயிருக்கும் - மனிதனைத்தவிர!மனிதனுக்கோ அறிவு அதிகம், ஆதலால் சுகமான வாழ்வு தேடியே பெரும் ஓட்டம் நூறு வருடங்களுக்கு முன்அந்த சுகமான வாழ்வு பெற புதுப்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கான ஓட்டம்அந்த ஓட்டத்தில் இயற்கையின் இயல்பான ஓட்டத்தை பலசமயம் பின்தள்ளி மனித சுகமே பிரதானமாய் நினைந்து மற்ற உயிர்களின் நலனைப்பின்தள்ளி இயற்கையின் பசுமையை புறந்தள்ளி மனிதநேயம் எனும் அளப்பரிய அழகை குழிதோண்டி புதைத்து வெறும் மனித மனித சுயநலமான சுகபோக வாழ்க்கையை பிரதானப்படுத்தி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. இந்த ஓட்டத்தில் நாம் மிதித்து நசுக்கிய இயற்கை அன்னை இன்று சீற்றமெடுத்து பேரிடர்களாய் தன் கோபத்தை காட்டிக்கொண்டிருக்கிறாள் திடீரென சூறாவளி, வரலாறு அறியா வெப்பநிலை ஒரு பக்கம் சொட்டு நீரில்லா வறட்சிமற்றொரு புறம் வெள்ளக்காட்டில் நனைந்த பூமி பெரும் சேதம் விளைவிக்கும் பூகம்பம்  அதன் செல்லப்பிள்ளையாய் வரும் சுனாமி ஓசோன் படலத்தில் ஓட்டை அதன் விளைவாய் சூரியனின் கதிர்கள் உயிர்கட்கு  தீங்கு விளைவிக்கும் அவலம்!இப்போது நாம் இயற்கைக்கு விளைவித்த துரோகத்தை எண்ணியே மீண்டும் புதிய ஓட்டத்தை துவக்கி இருக்கிறோம் பழையனவற்றை புதுப்பிக்கும் புதிய ஓட்டம்  மீண்டும் பசுமையைத்திருப்பிக்கொணர செடி கோடி மரங்கள் வளர்த்தல் கணக்கில்லா வாகனங்களின் நச்சுப்புகை குறைத்தல் வாகன ஓட்டங்களை கட்டுப்படுத்தல் நாம் நசுக்கி மிதித்து காணாமல் போன பெரும்பான்மை அறுதி விலங்குகளை மீண்டும் வளர்த்தல்சீற்றம் கொண்ட கடலை பெரும் பாறை கொண்டு தடுத்தல் பெரும் இரசாயன உரங்களை விடுத்து இயற்கை உரங்களுக்கு தாவுதல்  இப்படி நாமே இயற்கைக்கு செய்த கொடுமைகளுக்கு நாமே நிவாரணம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் இந்த புதிய ஓட்டத்தில் வெற்றி இந்தப்புதிய ஓட்டத்தில் நாம் வெற்றி பெறுவோமா? இல்லைஇயற்கையின் சீற்றம் நம்மை வெற்றி கொள்ளுமா? இன்னும் சில நூற்றாண்டுகளில் விடை தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com