புதிய ஓட்டம்": H ஹாஜா மொஹினுதீன்

பள்ளிக்கு தாமதமானதால் -தாவி தாவி ஒரு ஓட்டம்!கடைசி மணிஓசைகேட்டு -கவலை மறந்த ஓட்டம் !வீடு திரும்பிய மறுகணமே -வீதியை நோக்கி ஒரு ஓட்டம் !விளக்கு வைக்கும் வரைதனிலே  -விளையாட்டில் ஒரு ஓட்டம் !படிப்பை முடித்த நாள்முதலே -பணத்தை தேடி ஒரு ஓட்டம் !சேர்த்த பணத்தை சேமிக்க -செருக்கோடு  ஓர் ஓட்டம் !நிதானத்தை தவறவிட்டு -நிம்மதியை தேடி ஓர் ஓட்டம் !நித்தம் நித்தம் ஓட்டமெல்லாம் -"நான்" எனும் செருக்காளே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com