புதிய ஓட்டம்: கவிஞர் கே. அசோகன்.

புலர்பொழுதின் காலையிலே கதிர் பரப்பும்
பகலவன் பயணமும் பூங்காவின் உள்ளே
மலரொன்றைத் தழுவி புத்துணர்வை ஊட்ட
மணம்தான் எங்கும்வீச புதிய ஓட்டமாமே!
நிலத்திலே பச்சைவண்ணம் படர்ந் திருக்க
நீரோடி பாய்ந்துதான் செழித்து வளர்ந்தால்
உலவுவதற்கு உற்சாகத்தை தந்து விட்டால்
ஓட்டமாய் ஓடுதற்கும் உத்வேகம் தருமே!
மாலையிலே நிலவும்தான் ஒளி பாய்ச்ச
மங்கையர் மகிழ்வாக பேசிட வேதான்
மாலையிடும் மணாளைத் தேடித் தானே
மலர்சூழ் சோலைக்குள்  ஓட்டம் தானே!
சோலையிலே கூவுகின்ற குயிலின் குரலும்
சொக்கிவிழும்  மைவிழியாள் குரலில் தான்
சாலையிலே ஓடுகின்ற வாகனம் போல
சடுதியில் பிடித்ததே  புதிய ஓட்டமாய்
அதிகாலை கண்விழித்து எழுந்து விடின்
அன்றைய நாளெல்லாம் புத்துணர் வோடு
புதிததாய் பிறந்ததென உற்சாக மாய்
பொறுப்பாய் நம்பணிகள் ஆற்றி வரின்
எதிலுமே வெற்றிகள் தானாய் சேர்ந்து
எட்டியே ஓடிடுமே சோம்பல்  தானே
நிதியமென காலத்தையே கருதி வந்தால்
நல்லபல சாதனைக்கு புதிய ஓட்டமாமே!
பிள்ளையை பேணுகின்ற போழ்திலே தான்
பண்போடு பாசத்தையும் ஊட்டி விட்டால்
பிள்ளைகளின் அறிவுநலம் ஆற்றல் நலம்
பெருகியே பண்பாடாய் வாழ்ந்திடு வாரே
பள்ளத்திலே ஓடிவிழும் நீரைப் போல
படிப்பதற்கு பாதையினை வகுத்து விட்டால்
உள்ளத்திலே உத்வேகம் பிறந்து விடும்
ஓட்டமாய் புதியதொரு சாதனை படைப்பாரே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com