புதிய ஓட்டம்: கவிஞர். நாகராஜன்

ஆயிரம் விருதுகள்
பல ஆயிரம் வெற்றிகள்
ஆயிரம் ஆயிரம்
புகழ்மொழிகள்

என்றாலும்

ஓட்டப்பந்தய
வீரனுக்கு
ஒவ்வொரு முறையும்
“புதிய ஓட்டம்தான்”

கோடி ஆண்டை
முடித்த விருச்சம்
கொடுத்த விதையும்
விதைத்த பின்னே
வளர, வளர
அசையும் கலையே
“புதிய ஓட்டம்தான்”

கிளைகள் தோறும்
பறவைக் கூட்டம்
பறந்து அமர்ந்து
எழுந்து தாவி
பணிக்கச் செய்யும்
கலைகள் நமக்கு
பார்த்திடும் போதே
“புதிய ஓட்டம்தான்”    

மறைநூல் தந்திடும்
மந்திரம்  
நம் மழலைகள் சிந்திடும்
புன்னகை  
சோம்பல் மனிதரை
சுறுசுறுப்பாக்கி
சுழன்றிட வைப்பதும்
“புதிய ஓட்டம்தான்”

எழுகிற ஞாயிறு
பொழிந்திடும் மழையும்
உதவிடும் இயற்கை
வளந்தரும் எல்லாம்
“புதிய ஓட்டம்தான்”

இருக்கின்ற இதயம்
எத்துனை பழமை
என்றாலும் 
எப்போதும்
எண்ணத்தின் ஊற்றே
“புதிய ஓட்டம்தான்”

மடமைகள் ஒழியவும்
கடமையை உணரவும்
பழமையும் புதுமையும்
பகுத்தே பார்த்திடல்
“புதிய ஓட்டம்தான்”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com