காந்திக்கு ஒரு கடிதம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

அன்புள்ள காந்திக்கு ஆசையில் ஓர் கடிதம்!பண்புள்ள இந்தியா உருவாகும் என்றநம்பிக்கையில் சுதந்திரத்தை மீட்டீர்!நீவீர் சுடப்பட்டு இறக்கும்போதுஅந்நம்பிக்கை மோசம் போனது!அஹிம்சையை போதித்த உமக்குஹிம்சையான ஓர் மரணம்!அப்போதே துளிர்த்துவிட்டது இந்தியாவில்அசத்தியமும் வன்முறையும் இலஞ்சமும்!மெய் வருந்தி நீங்கள் பெற்ற சுதந்திரங்கள்பொய்யே உருவான மனிதர்களால்மீண்டும் அடிமையாக்கப்பட்டு மடிந்தது!அஞ்சல் தலைகளிலும் ரூபாய் நோட்டுக்களிலும்பாடப்புத்தகத்திலும் தேசப்பிதாவாக நீர்!அக்டோபர் இரண்டு மட்டும் இரண்டு நிமிடம்உன்னை நினைப்பர் போனால் போகிறதென்று!மதுவிற்கு எதிராய் இன்று மாதர்கள் கூடிமாபெரும் போர் நடத்த வேண்டியிருக்கிறது!ஏழைகள் மேலும் ஏழைகளாகவே இருக்க!பேழைகளில் பெரும் செல்வம் சேர்த்துக்கொள்கின்றனர்மாநிலம் ஆள்வோர்!மக்கள் நலமெல்லாம் மறந்து போய்தன்னலம் ஒன்றே குறிக்கோளாய்கொண்டு கோலோச்சும் ஆட்சியாளர்கள்மறக்காமல் உன்னை ஒவ்வொருவருடமும்மாலையிட்டு ஆராதிக்கிறார்கள்!மகிழ்ச்சி பொங்க மீண்டும் பிறந்துவிடாதே!சூழ்ச்சிகளுக்கு நீயும் பலியாவாய்!காந்தி தேசம் இப்போது காவி தேசமாகி வருகிறது!உன் மீதும் வர்ணம் பூசிவிடுவார்கள்!உத்தமரே! சத்தியம் மெல்ல இறக்கும் தருவாயில்;சாட்சியாக சிலையாக பார்த்துக்கொண்டிரும்!பாரதம்! சுதந்திர பாரதம்! உன் கனா எல்லாம்இப்போது வினாவாகி வீணாகிப்போகிறது!உன் ஆயுதம் அஹிம்சை இப்போது முனைமழுங்கிக்கிடக்கிறது! கூர் தீட்டவும்போரெடுக்கவும் யாரும் இல்லை!உன் உயிரை எடுத்தவர்கள் உன் கொள்கைகளையும்உன் உடலோடு புதைத்துவிட்டார்கள்!மீட்டெடுக்க வா! மீட்டெடுக்க வா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com