நிசப்த வெளியில்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

“சித்தர்கள் பாடலிலே” சொல்லிக் காட்ட  சிறந்தவெளி என்றெண்ணிச் சென்றால் நல்லபித்தமென்ற மனஇருளும் மறைந்தே போகும்  “பேரிரைச்சல் அடங்கியங்கே” அமைதி கானும்எத்துனையோ சித்தரெல்லாம் இகத்தில் நின்று  இயங்குகிறார் அச்சமென்ற நிலைகள் போக்க ஒத்தையென்று இருந்துவிட்டால் ஓசை இல்லை  உயர்ந்திடவே மனமறிதல் “நிசப்த எல்லை” வான்மழையை வரவேற்க இடியும் மின்னல்  வாழுகின்ற மனிதரிலும் இவைகள் உண்டு“வீண்வார்த்தை” உரைகளின்றி இருந்தே நாளும்  வினைவலியை தெரியமன வேகம் போகும்தேன்என்றே எண்ணங்கள் திரளும் போது  தெளிவென்ற மனவெளியில் “நிசப்தம் மலரும்”தான்என்ற கர்வத்தை வெல்லும் போது  தன்னாலே உணர்வதுதான் “நிசப்தம் ஆகும்” மண்ணிருக்கும் மனிதருக்கோ சப்தம் வேண்டும்   மனஅமைதி கொண்டிருந்தால் “நோயா என்பார்”கண்பார்க்கும் பொருளெல்லாம் வேண்டும் என்று  கத்திசப்தம் போட்டுநம்மை கடித்தே வைப்பார்“புண்படவே சுற்றிநின்று” சப்தம் செய்வார்  புரிந்திடாது தெரிந்திடாது சப்தம் செய்வார்உன்வழியில் உயர்ந்திடத்தான் சித்தர் சொன்னார்  உணர்ந்துகொண்டால் “நிசப்த வெளி(யில்)” கலப்பீர் என்றார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com