நிசப்த வெளியில்: மு.அமரேசன்

நின்றேன் நடந்தேன் நித்தம் நித்தம்நீ வருவாய் எனநிலவொளியின் நிழலிலேநீங்காத நினைவோடுஆந்தையும் விழிக்கிறது அழகனேஅச்சமில்லாமல் என்அரண் தேடி வருவதை எண்ணிநடுநிசியில் நாய்கள் குரைக்கிறதுநாணம் துறந்து நானும் நின்போல் துணிவோடு நின்றேன் ஒரு முடிவோடுபாவிகள் பதுங்கிய நாட்டிலேகாவியகாதலை காட்டிடஆவியை போல் நான் அலைவது அறமே !அணிகலன்கூட மேனியில் அசையாஅன்பரை காணாது அடம் புரிகிறதேபுன்னகை கூட்டாத இதழால்பூக்களும் கூந்தலில் வாடியதேதோழிகளோடு ஆடிய ஆட்டங்களில்தோற்றேன் உன்தோளில் மாலையிடும் சேதிகள் அறியாசோக மனதோடு தேதிகளை எண்ணி எண்ணிபூமியில் பாடி பறக்கும் நேரமிதுபூவை நெஞ்சி நோகா புயலேன வந்தபூபாலா !நிசப்த வெளியில் நீ கொடுத்த முத்தம்நித்திரையின்றி தவித்த வாழ்வில்நினைத்த கனவுகள் யாவும் பலித்திடுமே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com