பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: -- கவிஞர் நம்பிக்கை  நாகராஜன்   

கொஞ்சம் கொஞ்சம்  மழையென்  றாலும்   பிஞ்சு  மனசு  துள்ளும் -- அதுகொட்டித்  தீர்க்கும்  மழையில்  நனைந்து   “கப்பல்  ஓட்டி”  வெல்லும்நெஞ்ச  மெல்லாம்  மகிழ்வு  நிறைந்து   நேசப்  பார்வை  பார்க்கும் -- பாப்பா“மஞ்ச  மென்றே”  சேற்றை  நினைத்து   மகிழ்ந்து  உருண்டு  தீர்க்கும்அஞ்சும்  நிலைகள்  மறந்து  மழையை   அதிகம்  வேண்டிக்  குதிக்கும் -- பாப்பாகொஞ்சும்  பார்வை  “குளிர்ச்சி  ஆக்கி”   கூவி  மகிழ்வை  நிறைக்கும்கெஞ்சிக்  கெஞ்சி  அன்னை  அழைக்கும்   “கோரிக்கை  தான்”  எல்லை -- உணவுசெஞ்சு   வைத்து  அழைத்த  போதும்   செவிகள்   கேட்க  வில்லைநஞ்சை  புஞ்சை  வளர்  பயிராய்   நடந்து  நடந்து நடிக்கிறா -- பாப்பாபஞ்சைப்  பிடிக்க  “பாய்வது  போல்”   பாய்ந்து  மழையை  பிடிக்கிறாமிஞ்சும்  மழையை  கண்டு  எங்கள்   செல்லப்  பாப்பா  சினுங்குறா -- அந்தபிஞ்சு  மனப்  “பிள்ளைக்  காக”   கொஞ்சி  மழையும்  குலுங்குது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com