பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: அழகூர். அருண். ஞானசெகரன்

பிஞ்சு மனங்களே மழைநிற்க வேண்டிப்          பிரர்த்தனை செய்வதெல்லாம்,     பேதையர் அவர்கள் மகிழ்வுடன் விளையாட          பெரிதுமாய் விரும்பிடுவார்!வஞ்சகம் இல்லா அவர்களின் விருப்பத்தை          வருணனும் நிறைவேற்ற,     வறட்சியே எங்கெங்கும் தாண்டவம் ஆடிடும்          வளருமோ பயிர்களதும்?நெஞ்சம் உருகிட மழைதன்னை வேண்டுவோர்          நித்தமும் கோடிமக்கள்,     நிலத்தினில் பயிர்கள் தழைத்தே வளர்ந்திட          நிச்சயம் மழைதேவை!கொஞ்சமும் குறைவின்றி மழைபெய்ய வேண்டும்          குவலயந் தனிலெங்கும்,கொட்டா திருந்திடக்  கடலதும் வற்றிடும்          குலைந்திடும் உயிர்களினம்!செல்லமழை பொழிந்திடத் தானே       சிறப்பாகப் பயிர்களும் விளைந்திடும்!இல்லாதே போய்விட உயிர்கள்       எங்ஙனம்  உலகினில் நிலைக்கும்?பொல்லாதப் பேய்மழை யாகவே       பொழிவதால் விரயம் தானாம்!நல்லமழை என்றா குவதும்       நயமாகப் பொழிவது தானாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com