பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கவிஞர் கே. அசோகன்

வஞ்சமில்லா எண்ணம் கொண்டுவாழ்ந்த அந்தகாலங் களிலேகொஞ்சி குதித்தோடும் அற்றிலேகுளிக்கவே ஆசை எழுந்தனவேபிஞ்சாய் மனங்கள் இருந்த தால்படகொன்றை காகித த்தில் செய்தேஅஞ்சாமல் அதனை ஓடும்நீரில்ஆடியாடி அசைய ரசிப்போமே!ஆற்றோரம் மரங்கள் வைத்துஅதனழகில் ரசித்து மயங்கிகாற்றிலே நன்றாய் தூங்கிகவலையை மறந்திருந் தோமே!வேற்றுமை எண்ணங்கள் இன்றிவீதியுலா போகும் தேரையேபோற்றியே இழுத்து போனோம்!பொறாமை மனதில் இல்லை!வீட்டுக்கொரு திண்ணை வைத்துவிருந்தினர் தம்மை உபசரித்துபூட்டினை நெஞ்சில் போடாதுபொறுமையாய் உணவும் இட்டுகாட்டிய பரிவும் பாசமுமேகனிவான பிஞ்சுமனம் தானேகாட்டின இயற்கையும் தான்கருணையில் மழையும் தானே!உறவுகள் கூடிவாழ்ந்த தாலேஊரெல்லாம் செழித்த்து பார்!கறக்கின்ற பசுவின் கன்றுக்குகருணையால் பாலருந்த செய்துசிறப்புடன் வாழ்ந்த முன்னோர்சீரிய பிஞ்சு மனம் கொண்டாரேஅறங்கள் போற்றிய தாலேஅடிக்கடி செல்ல மழைதானே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com