பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கவிஞர் ராம்க்ருஷ்

மழை காணக்கிடைக்காத ஒன்றாகியதாலேகழைக் கூத்தாடியின் சாகசம் காணும் நிலையில்அழையாமல் வந்த சாரல் மழை காணும் ஆவல்தழை இலைகள் நனைவதில் ஓர் ஆனந்தசுகம்பிஞ்சு உள்ளங்கள் மழை அதிகம் பார்த்ததில்லைஅஞ்சி நடுங்கி வீட்டினுள்ளே சென்றமர்ந்தனவேவஞ்சி ஒருத்தி மழைச் சாரலிலே ஆடுதல்கண்டுநெஞ்சினிலே உரமேற வெளியில் வந்தனரேசெல்ல மழையும் கொஞ்சிக் கொஞ்சித் தூறலாகிமெல்ல மெல்ல பூத் தூவலாகவே தொடங்கியதால்இல்லம்விட்டு வந்த பிஞ்சுகளும் சாரல் கொண்டேபுல்தரைமீதேறி குதித்து குதித்து கும்மாளமிட்டனவேசாரல் மெல்ல சிறுமழையாகி அருவியென விழஆரவாரமும் கூச்சலுமாகி பேராவலில் ஆடினரேஓரமாய் நின்ற பெரியவர்கள் உள்ளேவர அழைத்தும்தூரமாய் சென்று மீண்டும் மீண்டும் ஆடின பிஞ்சுகள்பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் நட்பாகியேகொஞ்சு மழலையில் கூடிக்கூடிப் பேசினவேவஞ்சமில்லாத அன்பு ஊற்று ஆறாய்ப் பெருகியேநெஞ்சமெல்லாம் நிறைந்தும் தொடர்ந்ததுவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com