பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: கவிஞர்.கா.அமீர்ஜான்

எனக்கானக் கல்வியை
தெரிந்தெடுக்க முடியாமல் 
திகைக்கிறது  மனசு...

என் தாய் மொழியைக் கூட
பேசவும் எழுதிக் கொண்டாடவும் 
அனுமதிக்கப் படவில்லை
என் சுதந்திரத்தைப் பறித்த
அவர்கள்...

உண்ணும் உணவும்
உடுத்தும் உடையும் கூட
அவர்களாலேயே திணிக்கப்படுகிறது
எனக்குள்...

ஒரு குடையின் கீழ்
பூமி இருக்க வேண்டி கிழித்து
எரித்துப் போடுகிறார்கள்
சிறுபான்மைக் குடைகளையும் போல
எதிர்க் குரல் எழுப்பும் புல்லாங்குழல்களின்
குரள் வளைகளையும்...

தேசியக் கொடியிலும்
நிறம் மாற்றி தன் நிறத்தைப் 
பூசிக்கொள்கின்றனர் அவர்கள்
எந்த அசூஸையுமின்றி...

யாதுமூரே
யாரும் கேளிரென வாழும் தேசத்திலும்
சுயத்தின் பிம்பம்
சலனமற்று சுற்றி வருவது தான்
சுறுக்கென்று குடைகிறது
மனிதம் வசிக்கும் மாண்புடை
மனத்தை...

அநியாய அசகாய சூரர்களால்
அடாவடித் தனங்கள்
இங்கெங்கெனாதபடி நிறம்பி வழிவதால்
எதிர்க் காலச் சந்ததிகள்
நம்பிக்கையற்று
திகைத்து
இருப்பற்று அலைகின்றன...

நுங்காய்
நெளிந்து அதிரும்
பிஞ்சு மனசுகளும்;
நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்து
ஆதரவில்லாமல் குழம்பி
கண்கள் உடைத்து
சோகத்தில் வெளிப்படும்
செல்ல மழையும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com