பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: மீனா தேவராஜன்

ஆழி தந்தையிடமிருந்து ஆவியாய் எழும்பிமழைமேகமாய் வளியில் கிடந்தும் மிதந்தும்மழையாய் மண்ணில் பொழிந்தும் விழுந்தும்வளைந்தும் நெளித்தும் கடலில் கலந்திடுமாறுநித்தில சீவன்களுக்குச்  செல்ல மழையாகும்நித்தமும் நினைத்தும் இன்பம் தருமதனாலேதந்தை மெய்யெழும்பித் தாய்மெய்யடைந்துசொந்தம் கண்டு கருவில் மிதந்தும் கிடந்தும்பந்தமும் பாசமும் பொழிகுழவியாய்ப் பிறந்தும்சொந்தங்கள் விரும்பும் செல்லமாய் வளர்ந்தும்மண்ணிடை பந்தங்கள் பெருக்கு மழலையாகும்கண்மணி வாழ்வதனில் மகிழ்வு தருமதனாலேபிஞ்சு மனங்களை நினைத்தால் கொஞ்சி விளையாடகெஞ்சும் மனம், செல்ல மழையை நினைத்தால்துள்ளி விளையாட விழையும் பிஞ்சு மனங்களுக்குகள்ளமில்லா மழலைகளும் செல்ல மழையும்செயற்கை இன்பம் நல்கவில்லையென்பதால்இயற்கையன்னை மடியில் ஓரொக்குமே!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com