நதிக்கரையின் நினைவலைகள்: அ.வேளாங்கண்ணி

ஞாபகங்கள் தொலைந்து போவது போல‌நதிகளும் தொலைந்து வருகிறது..மாற்றங்கள் உலகில் வலம் வர‌நதியின் தோற்றமே மாறிப் போகிறது..புண்ணிய நதிகளும் மாசாகிறது..அதன் மணலோ கோடி காசாகிறது..கரையோர வனங்கள் களவாடப்பட்டுகறையான மனிதரால் வீடாகிறது..பல திசைகளிலும் சுகந்திரமாய் பயணித்த நதி..சுய நல மனிதரால் தடுக்கப்படுகிறது..அதன் போக்கே கெடுக்கப்படுகிறது..அதை வைத்தே அரசியல் நிகழ்கிறது..நம்மை மகிழ்வித்த நதிக்கு நாமளித்த‌ பரிசு இது..நம்மை சுத்தமாக்கிய நதிக்கு நாமளிக்கும் அவமதிப்பு இது..நம்மை தாகமின்றி காத்த நதி படும் பாட்டில்அதன் தலைமுறையே மறக்கடிக்கப் படுகிறது..நதி காக்க பாட்டுதித்து என்ன பயன்?நதிக்காக நாம் வெறென்ன செய்தோம்?நதி தொலைத்த இடங்கள் எத்தனையோ!நதி தொலைத்த மலர்கள் எத்தனையோ!நதியின் நினைவில் வானும் மேகமும் தவிக்குதோ!அதைக்காணாமல் தானோ மழையைத் தரவே மறக்குதோ!நதி நம் வாழ்வின் ஒரு அங்கம்..அதை மறைய‌ விட்டதால் இதயத்தில் வறட்சி எங்கும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com