நதிக்கரையின்  நினைவலைகள்: கே.நடராஜன்

ஆடி மாதம்... கரை புரண்டு ஓடும் காவிரி 
வெள்ளப் பெருக்கில் உள்ளம் கொள்ளை 
போனது ஒரு காலம் !

காவிரி  நதிக்கரையில் ஆடி பதினெட்டாம் 
நாள் மணல் வீடு கட்டி மஞ்சள் பிள்ளையார் 
சாட்சியாக  நடக்கும் "புது மனை புகு விழா "!
காதோலை கருகுமணி அணிந்து காவிரி 
தாயும் கரை கடந்து வருவாள் புது வீட்டில் 
நடை பயில ! தடை ஏதும் இருக்காது 
கூடி இருக்கும் குழந்தைகளின் பாட்டுக்கும் 
ஆட்டத்துக்கும் !
அது ஒரு காலம் ...கனாக் காலம் !

கரை புரண்ட காவிரி நீ  இன்று என் மண்ணில் 
தடம் பதிக்கவே  மறந்தது ஏன் ?
உன் கரையில் நின்று உன் அலை வேகம் 
பார்த்த நான் இன்று நதி நீ எங்கே என்று 
தேடுகிறேன்...இங்கும் அங்கும் ஓடுகிறேன் 
நான் உன்னைத் தேடி !

என் மனதில் மட்டும் நீ இன்னும் ஓடுகிறாய் 
ஒரு இனிய நினைவலையாக ! 
நினைவலையாக என் மனதில் ஓடும் நீ முத்தமிட
வேண்டும் என் மண்ணையும் மீண்டும் ! 
தாய் உனக்கு தெரியாதா உன் பிள்ளையின் 
தேவை என்ன என்று ? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com