சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்

கற்கவும் அதன்வழி நிற்கவும்
கற்றுத்தந்து, கல்வியோடு,
கடமையையும் கண்ணியத்தையும்
போதித்த இச் சமூகத்திற்கு
ஒரு  சிறிதளவேனும் கைம்மாறு
செய்யாமலிருப்பது 
சமூகக் குற்றம்;

அறம் செய்து பொருளீட்டி, இன்பம்
துய்ப்பவரேயனாலும்,
கொடுத்து மகிழும்
குனமில்லாதிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;

எந்த வயதிலும்
எந்த நிலையிலும் பிறர்க்கு
இன்னுரை வழங்காமல்,
சிரித்து வாழாமல் இறுகிய
மனம் கொண்டிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com