சமூகக் குற்றம்: கவிஞர் ராம்க்ருஷ்

மனித சமூகம் மாண்புகளில் கட்டமைக்கப்பட்டதுஇனிதான கூட்டமைப்பின் அடித்தளம் பெற்றதுதனிமனித ஒழுக்கங்களால் வரையறுக்கப்பட்டதுபுனிதமான உறவுகளின் விளக்கங்களால் ஆனதுஒருவனுக்கு ஒருத்தி என்ற உறுதியிலானதைவருவதை கள்ள உறவில் வை என்றாவது சரியாஅருகில் பெண்ணிருந்தால் பாலியல் ஞாபகமாஉருகிடும் காதலெல்லாம் காமத்திற்குத் தானாவயதுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வரையறுத்துஇயல்பான மணத்திற்கு இனிதாகும் உறவுகள்கயவர்கள் முதியவர் இளையர் என வேறுபாடற்றுசுயமிழந்து பச்சிளம் பால சிசுவையா வதைப்பதுஆறறிவு படைத்தவன் மனிதன் என்ற பெருமைசேறறிவாய் மதியிழந்து மானமிழப்பதா மனிதாமீறலிலும் ஒரு வரைமுறையில்லாத கொடுமைநாறலாச்சே நாதியற்ற நல்லறிவு சமூகத்திலேமுறையான உறவுகள் அறிந்தவன் மனிதன் தானேகறையான பாலியல் பலாத்காரம் இழிவல்லவாசிறையாவதற்கும் சீரழிவதற்குமா பெண் பிறவிகள்உறைய வைக்கும் சமூகக் குற்றங்கள் பெருகலாமாதஞ்சமென வந்தவளை தாரை வார்த்து பொருள் பெறமஞ்சத்திலிட்டு காய்ந்த சருகாய் கசக்கி பிழிய எனநெஞ்சம் வெடிக்குமளவு சமூகக் குற்றங்கள் இங்கேபஞ்சமின்றி பல்கிப் பெருகுவது மனித சாதியிலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com