வஞ்சம் செய்வாரோடு:  எஸ். கருணானந்தராஜா

நெஞ்சிலே வஞ்சமுண்டா நினைவிலே குரோத முண்டாகொஞ்சமும் கவலை வேண்டா குறையிலார் யாருமில்லை.அஞ்சற்க யாரும் வீணே அதற்கெல்லாம் நிவர்த்தியுண்டுவஞ்சகரோடும் கூட வாழ்ந்திடல் கடினமில்லைபுகைந்திடும் பொறாமையோடும் புழுங்கு தீ மனத்தினோடும்பகைதீர்க்க வென்று நாளும் பதைத்திடும் கோபத்தோடும்மிகுபல பேர்களிந்த மேதினி மீதிலுள்ளார்சகசமே மனிதர்க்கிந்த தரித்திரம் பிடித்த வாழ்வு.அன்புதான் இன்ப ஊற்றென்றி வினைச் சொன்னார் புத்தர்அன்புதானுலகை வெல்லும் அதிபெரும் சக்தியென்றார்துன்பமேயில்லா வாழ்வைத் தூய நல்லன்பு சேர்க்கும்என்பதையறிந்தால் மாந்தர் இதயமேன் பகையைச் சேர்க்கும்?கொன்றிட வதைகள் செய்த கொடியவர் தனை மன்னிக்கஅன்று யேசுக் கிறிஸ்து  அன்பொடு ‘என் பிதாவே!நன்று தீதறியா இந்த நண்பரை மன்னியுங்கள்‘என்றுதான் இறையைக் கேட்டார்  இன்னா செய்தார்கள் நாண.வள்ளுவன் அன்று சொன்ன வார்த்தைக்கு ஏற்ப யேசுவெள்ளை யுள்ளத்தினோடு வேண்டினார் தன் பிதாவைஉள்ளுவதுயர்வாயானால் ஒருவரும் பகைவராகார்தள்ளிடார் எமது அன்பைத் தக்கதென்றதனை யேற்பார்.பகைநடுவினிலே அன்பாம் பரமன் வாழ்கின்றானந்தப்பகைவனுக்கருள் செய்யென்றே பாரதி அன்றுரைத்தான்அகமதில் அருளூற்றாக ஆண்டவனுள்ளானிந்தஇகமதிலிதுவே யுண்மை என்றனர் உணர்ந்த சான்றோர்.எத்தனை பூசை யாகம்  இயற்றினும் இதற்கும் மேலாய்எத்தனை புனித யாத்ரை எங்கெலாம் செயினும் வீணாம்அத்தனை பேரும் தங்கள் அகத்தினுள் இறையைத் தேடார்,  சித்தமே பரத்தின் கோயில் தேடுவோர் கண்டு கொள்வார்.உள்ளமே பெரிய கோயில் உயிரதே சிவனாமென்றுதெள்ளிய மனத்தினூடு திரு மூலர் சொன்ன வார்த்தைஎள்ளளவும் பொய்யில்லை இருதயக் குகையினுள்ளேகள்ளமாயுறையு மந்த கருணையே தெய்வமாகும்.ஆதலால் வஞ்சம்செய்வா ரகத்தினிலிருக்கு மந்தத்தீதிலா இறையைக் காணும் திறனதைப் பெற்று விட்டால்யாதொரு பயமுமில்லை நமக்கெதும் தீமையில்லைவேதமாய் இதனைக் கொண்டு மேதினியோரே வாழ்வீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com