வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் ராம்க்ருஷ்

நெஞ்சம் இனிக்கப் பேசி இழைவாரோடுபஞ்சம் இல்லா அன்பு காட்டிப் பாராட்டிடதஞ்சம் அடைந்தேன் உனை என்பவர்வஞ்சம் செய்வாரென நினைக்கக்கூடுமோகூட இருந்தே குணங்கள் அறிந்து பழகியவர்வேடமிட்டு பசுத்தோல் போர்த்திய புலியாய்சூடமேற்றி வாக்குறுதிகள் தருவார் எப்போதும்மூடராய் பின்னில் குழிகள் தோண்டிடுவாரேதீயவரைக் கண்டதும் விலகி நடந்திடக்கூடும்மாயவராய் மறைந்திருந்து தீச்செயல் புரியதூயவரென நினைத்துப் பழகி ஏமாற்றத்தில்சாய நின்ற தூண் சரிந்து விழுந்ததுபோலாகுமேவாய்மை என்பது வாயோடு நின்று மறைந்திடதாய்மை அன்பு காட்டியும் நன்றியில்லாமலேவேய்ந்த பொய்மையைப் பின்னால் நிறுத்தியேதோய்ந்த வஞ்சம் செய்வாரோடு வாழ்தல் தகுமோநெஞ்சு பொறுக்குதில்லையே இவரை நினைந்துபஞ்சுபோல பறந்து எங்கும் ஒட்டி உறவாடுவார்அஞ்சி விலகிச் செல்வதே நல்லவர்க்கழகாகும்வஞ்சம் செய்வாரோடு உறவு கொள்ளாதே நீயும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com