அந்நாளே திருநாள் - கவிஞர் கு. அசோகன்

கண்ணுக்குள் தூக்கமோ தங்கி யிருக்க
கணஇருட்டில் எழுப்பியே என்தலை யில்
எண்ணையை  நன்றாக தேய்த்தே விட்டு
என்இருவிழி களுக்குள் எண்ணெய் இறங்க
கண்ணிலே சீயக்காய் தூளும் விழுந்திட
எண்ணெய் குளியலை செய்து சென்ற
என் பாட்டி செய்த நாளும் அந் நாளே!
இனிதான அந்நாளும் வந்திடுமோ இன்றே!

தித்திக்கும் பலகாரம் செய்தே வைத்து
தேன்சுவை கனிகள் படைய லிட்டே
எத்திக்கு வீடுகளிலே நடை ந டந்தே
இனிய பலகாரம் எடுத்துக் கொள்ளுங்கள்

பத்தரை மாற்று மனசெல்லாம் அந்நாளே!
பதுங்கிதான் போனதுவே இந்நாளி லே!
சொத்தாக அன்பையே சேர்த்து வைத்தார்
சுகமாக அடுத்தவர் நலம் பேணி காத்தார்

மரியாதை கரம்பேசும்  தமிழ்மொழி யாலே
மணக்க மணக்க வாயார வாழ்த்திடு வாரே!
அரிதாக ஒருவரையே கண்டு விட்டால்
அன்போடு இல்லத்திற்கு கூட்டிச் சென்றே

சரியாசன இருக்கைதான் தந்தே தான்
சமத்துவமாய் அந்நாளில் நடத்தி வந்தார்
அரிதான காட்சியாய் இந்நாளில்  தான்
அபூர்வமாய் நிகழ்கின்றதே சிலநேரத் திலே

தீபஒளிக்கு பட்டாசுகள் கணகணக்கும்
தைப் பொங்கலுக்கோ கரும்பு இனிக்கும்
பரபரப்பு உலகத்திலே எல்லாம் மாயம்!
பட்டொளி பறக்கின்ற பட்டமும் காணோம்!
கரகரவென சுற்றுகின்ற பம்பர சுழற்சி
கைகளிலே குறுகுறுவென சுற்றும் போது

சுறுசுறுவென ஓர்உணர்வு பெருகும் வேளை
சுற்றித்தான் திரிந்தோமே அந்த நாளிலே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com