நினைவுப் பெட்டகம் - 2017: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

இனிதாய் நடந்தது
இனிய விழாக்கள்
எத்தனை இன்பங்கள்
எளிமை உள்ளத்தில்

புதிய புதிய சிந்தனைகள்
புதிதாய் மலர்ந்தன 2017-ல்
சாதனை சிகரத்தை
சுலபமாக வென்றேன்-2017- ல்

சுற்றுலா தலங்கள்
சுற்றித் திரிந்தோம்- இன்பமாய்
மொழி வழி வாழ்ந்தோம்
மெய்மையை வளர்த்தோம்

நன்மைகள் பயனுற
நன்றாய் மலர்ந்தது
வாழ்க்கை நெறிமுறைகளை
இலக்கியம் வழிவகுத்தது 2017- ல்

பண்பாட்டைக் காத்தோம்
பாரினில் வென்றேன்
எத்தனை எத்தனை விருதுகள்
எண்ணங்கள் நிறைவேறின
இலக்கிய சுவைகள்
இனிதாய் இருந்தது

நினைவுப் பெட்டகமாய்
நிலைத்து நின்றேன் 2017-ல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com