நினைவுப் பெட்டகம்-2017: பொன்.இராம்

துர்முகி தை முதல்
ஹேவிளம்பி மார்கழி ஈறாக
கழிந்த இலைச்சருகாய்
கடந்துபோன மாதங்களை
எண்ணிப் பார்த்தே
வியக்கின்றேன்!

பன்னிரெண்டு  மாதப் புள்ளிகளில்
வாழ்க்கைச் சிக்கல் கோலங்களை
வரைந்து வாழும்
விவசாயி வாழ்க்கைதனை
எண்ணியே நானும்
வியக்கின்றேன்!

தொடங்கிய வேகத்தில்
முடித்து வைக்கும்
அரசியல் மாத(மத)ப் புள்ளி
சகுனிகளின் பகடைக்காய்
உருட்டல் நெளி கோலங்களை
எண்ணியே நானும் வியக்கின்றேன்!

பாலியல் சட்டங்கள்
ஆணுக்கு சார்பாக
இயங்குதல் கண்டு
எண்ணியே நானும்
வெதும்புகின்றேன்!

வெள்ளைக் குழலும்
மதுக் குப்பியும்
கண்ணுக்கும் நாவுக்கும்
விருந்தளிக்கும் 
மேற்கத்திய பண்பாடு கண்டு
நானும் இணைந்தே
சிரிக்கின்றேன்!

கண்டிக்க இயலா தூரிகையின்
இணைய மையினில் 
2017 - நினைவுப் பெட்டகத்தில் நான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com