யுத்தம் செய்யும் கண்கள் : ஆபிரகாம் வேளாங்கண்ணி

அவன் விலகினால் தணலாகிறது
நெருங்கினால் குளிர்கிறது
குளிருக்கு மருந்தானவன் மனதுக்கு
விருந்துமவனே யாவான் 
இமைகள் மூடி திறக்கும் போழுதில்
மாயமாவானோ என்றேதோ
குத்தம் செய்யப் போகிறது என்றே
தெளிவாகிறது அதுவரை
யுத்தம் செய்யும் கண்கள் 
இரண்டும் இமைகள் மூடமுயலாது

என்னையும் அவனையும் சேர்த்து வச்சி
ஊரார் பேச்சி மூச்சிக்கு மூச்சி
அது உண்மையாய் நடந்தால் தானே என்
மனசுக்கு பெருமகிழ்ச்சி
அவன்மட்டு மென்னை ஒற்றை நாழி
பார்த்திட்டாலே போதும்
மண்டையைக் வெருப்பேற்று மவனை
சுருட்டி மடக்கி யென்றன்
கொண்டைக்குள் ஆயுள் கைதியாக்கி
நெஞ்சத்தி லிடந்தந்து
மஞ்சத்தை அலங்கரித் தென்னாவல்
பஞ்சத்தை போக்கிடுவேன்
வசைபடாதிருந்த வஞ்சத்தை தீர்த்துக்
கொண்டிடுவே னெளிதில்

அதுவரை யவன்மேல் 
யுத்தம் செய்யும் கண்கள் வைத்தக் குறி
மாறாது அந்த சமயம் வெகு துலைவில்
இல்லை யவனெல்லையை
நெறுங்கி விட்டேன் இனி
வெற்றிக் கொடி ஏற்றி ஆளப்போகும்
இளவரசி நானாவேன்
இனமாறி யினஞ்சேரும் யுத்தத்திற்கு
தடைபோட மாட்டேன்
மதம் விட்டு மதம் மாறும் யுத்தத்திற்கு
குறைக் கூற மாட்டேன்
எந்தன் யுத்தம் செய்யும் கண்கள் தம்
இமை மூட மாட்டேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com