யுத்தம் செய்யும் கண்கள்: ஷஹி ஸாதிக்

சத்தம் இல்லா நாழிகைகள்ரத்தம் சிந்தா வடுக்களில் ஒழிந்து கொண்டு!நித்தம் நித்தம் ச்வப்தம் இல்லா அசைவுகள் அவை!நுண்ணிய பார்வைகளுள்நொருங்கி ஒழிந்துகொண்ட,இரகசிய இரசனைகள்...!நொந்தும் வலி சிந்தாஇருகிப்போன பனிக்கட்டிக்குள் போல்இருதயம்!கடல்த் தொடா வானம் போல்...உடல் இல்லா வருடலோ கண்ணில்?உறைந்த பனிக்கல்லில்மறைந்து போனது தொடலின் உரிமை!தூரப் பாலையும் பனிப் பாறை சிக்குண்ட மனமும்!துரத்திச் செல்லும் பார்வை மட்டும்,பதிந்த உருவம் படிந்தே கிடக்க!துளைத்துச் செல்லும் புழுவெனத்தவிப்பு!புழுதி கூட ஈரமாக...வரண்டு போன எந்தன் கண்கள்!கரடு முருடு தளங்களின் மீதுஒளித் தெரிப்பு உடைந்துநெலிய!உருகி உடைந்து உயிர் பெற்றாலும்கருகிப் போன கண்ணதன் தேடல்!நெருங்கியே செல்லும் கண்ணில்நட்டுப்போட்ட அம்புளிகளுக்குள்,நுழைந்து செல்லும் சிவந்த குழாய்கள்நூராயிரம் தாண்டிக்கொண்டு!நுழைவே இல்லா இலட்சியத்தில்ஏதோ ஒரு எதிர்பார்ப்பு!மனதோடு மல்யுத்தம்!பார்வைக்குள் நுழைந்துபந்தாடிப் பார்க்கின்ற விதியின் வாள் வீச்சு!நிறமில்லாமல் இரத்தம் வடிகின்றவிசித்திரப் போராளி கண்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com