யுத்தம் செய்யும் கண்கள்: அ.வேளாங்கண்ணி

பிடிவாதம் மிகுதியாய்
இளங்காலை ஒளியாய்
மனமெங்கும் விரவியிருக்க..

லட்சியத் தேடலை
வாழ்வின் வெற்றிக்காக
நெஞ்சினில் வைத்திருக்க..

பூக்களை ரசியேன்
பாக்களை ரசியேனென
நூலினுள் மூழ்கியிருக்க..

எனக்கான வழியொன்றை
கணக்காக நானமைத்து
என்வழி தனித்திருக்க..

வழிகேட்டு வந்தவள்
வதம்செய்ய நினைத்ததென்ன
இதயத்துள் வலியெடுக்க..

மொழிமறக்க வைத்துவிட்டு
விழிபிதுங்க வைத்ததென்ன
என்வழி நான்மறக்க..

விழியெனும் அம்பாலே
இதயத்தை துளைத்ததென்ன
பலியாக நான்கிடக்க..

இருவிழிப் படையெடுத்து
என்னிதயம் பிடித்ததென்ன
நிலவிங்கு பார்த்திருக்க..

சேதாரம் ஏதுமில்லை
செய்கூலி கவிதைமட்டும்
தங்கமே நீகிடைக்க..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com