யுத்தம் செய்யும் கண்கள்:  கவிஞர் இளவல் ஹரிஹரன்

முகமதிலே ஆயுதங்கள் இரண்டாய்க் கொண்டு        முழுவதுமாய்த் தாக்குகிறாய் காதல் யுத்தம்நிகரில்லா ஏவுகணைப் பார்வை வீசும்        நினதிலக்கைத் தவறாமல் தாக்கி விட்டுவகையாக வளைத்துவிடும் வல்ல மையால்        மாட்டிவிட்டு மறுபடியும் முன்னே றத்தான்தொகையாகக் கரமிரண்டை நீட்டு கின்றாய்        துவண்டுவிட்டேன் மலர்க்கொடியாய்க் கைக ளுக்குள்.அப்பப்பா எப்படித்தான் யுக்தி கண்டாய்         ஆண்மகனே காதலினால் சக்தி கொண்டாய்தப்பப்பா என்றுசொல்ல மனமே யில்லை         தங்கமெனத் தாங்கத்தான் காதல் தொல்லைமுப்போதும் தருகின்றாய் நானென் சொல்ல         முனகலேதும் இல்லாமல் முழுமை யாகஎப்போதும் இருக்கத்தான் விரும்பு கின்றேன்.         இப்போதே யுத்தஞ்செய் சத்த மின்றி.ஆசையினால் அறைகூவிக் காதல் சொல்வேன்          அடிமையென எண்ணிடாதே ஆழ்ம னத்தில்பூசையெனச் செய்கின்றேன் பிரிந்தி டாத          பொன்மனதைக் கேட்கின்றேன் நெகிழ வைத்துவாசமலர் மாலைசூடும் நாளைக் காணும்           வசந்தமதைத் தேடுகிறேன் வெறும்யுத் தத்தால்பேசவரும் நாட்களினைக் கடத்தி டாதே           பெருகவரும் மணவாழ்க்கை நாம்கொள் வோமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com