மிச்சத்தை மீட்போம்: கவி. செங்குட்டுவன்

இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்தமரங்கள் எல்லாம் மறைந்து போகிறதுசிறு குழந்தைகள் சிரித்து விளையாடியமணல் கோட்டைகள் தகர்ந்து போகிறது…….எட்டிப் பார்த்தாலே நம்முகம் காட்டியகிணறுகள் எல்லாம் வற்றித்தான் போனதுகாய்ந்த புல்லை மேய்ந்த பசுக்களின்தாகமதைத் தீர்த்த குளங்களும் காணவில்லை……ஆடிப் பெருக்கிலே கூடிக் களித்தஆற்றுப் படுகைகள் எல்லாம் இன்றுசதையினை இழந்த எலும்புக் கூடுகளாய்மணலைக் காணாமல் பாறைகளாய் பளிச்சிடுகிறது…….குன்று தோறும் இருந்த குமரனையும்குடிபெயரச் செய்து விட்டே இன்றுகுத்தாட்டம் போடுகிறார் மலைகளைப் பிளந்தேமாபெரும் வணிகம் செய்யும் கயவர்கள்……..பருகும் நீருக்கும் பங்கம் விளைவித்தேபட்டணம் முதலே கிராமம் ஈறாகதண்ணீரை வெண்ணீர் விலைக்கு விற்றேபண்ணீரில் குளித்து மகிழ்கிறார் பலரும்…….இத்தனைக்கும் இடையில் மிச்சத்தை மீட்கவேகச்சத்தீவு கனவுகளை விதைத்து நமதுமனதையும் மூளையையும் மழுங்க அடிக்கிறார்கள்நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகள்……

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com