கொஞ்சி விளையாடும் கோபம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

அடித்தால் வலிக்கும் கல்லால்
அடிக்காமல் வலிக்கும் சொல்லால்
கல்லுமில்லை சொல்லுமில்லை
என்மேல் கோபம் கொண்டாள் இல்லாள்
கொஞ்சி விளையாடும் கோபம் உள்ளாள்

வலிய நோயின் வலியை சின்னஞ்சிறு
மாத்திரை குணப்படுத்தி விடுகிறது
விலிய கோபத்தை விளையாட்டாய்
கொஞ்சி புன்னகை மாற்றிவிடுகிறது
தந்திரமோ மந்திரமோ யில்லையதில்
சூத்திரமே யன்றி வேறெது வாகும்

உள்ளத்தில் கோபம் உதட்டில் அன்பு
வைராக்கியத்தின் படிக்கட்டாகும்
உதட்டிலே கோபம் உள்ளத்தில் அன்பு
நெஞ்சில் நிரடல் ஏதுமில்லா கோபம்
அச்சங் கொள்ளத் தேவையில்லை
கொஞ்சி விளையாடும் கோபம் தணிய

அடிப்பது போல் கோபம் அதில் 
ஆபத்து இருக்காது; துடிப்பது போல்
நடிப்பு அதில் வலியே இருக்காது; 
நொடிப்பு போல் விழுந்து நெளிவார்
அதில் ரோகம் இருக்காது; அழுவது
போல் கண்ணீர் வடிப்பு அதில்
கண்ணீர் ஒரு துளிகூட உதிராது 

கொஞ்சி விளையாடும் கோபம் கூட
சிலர் மனதை பாதிக்க சந்தேகிக்கும் 
அக்கோபம் நிஜமா பொய்யா என்று 
தீர தெரிந்த பின்பு மனம் குளிர்ந்திடும்
அன்பு என்ற ஒன்று மலர்ந்து விடும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com