அடுக்களையில்
உன் இடையினை
அளவிடும்போது
செல்லமாய்
ஓர் கோபம்,
ஆடை சலவையின்போது
உன் தோள்சாய்கையில்
துவண்டுவரும்
அன்பாய்
ஓர் கோபம்,
வண்டியில்
செல்லும்
பாதைதனில்
குலுங்கும்போது
என் முதுகில் சாய்ந்து
அதட்டலாய்
ஓர் கோபம்,
வேலைசெல்லும்
தருணம்
அன்பாய் ஓர்
முத்தத்தின்
பரிசாய்
ஓர் கோபம்,
சமையலை
குறைசொல்லும்
நேரத்தில் சிலிர்ப்பாய்
சிதறும்
ஓர் கோபம்,
இவைகள் என்றும்
வடுக்களாய்
என் நெஞ்சில்,
கொஞ்சி விளையாடும்
கோபம்