கொஞ்சி விளையாடும் கோபம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

அடம் ஆர்பாட்டம் அழுகை
குறும்பு , குழந்தை காட்டும்
வேளை , கொஞ்சி  தினம்
விளையாடும் கோபமே

தாய்மை கண்ட பெண்கள்
கர்பத்தில் உள்ள குழந்தை
இடம் கொஞ்சி விளையாடும்
கோபம் அலாதி அழகு

தூய நட்பின் பொருட்டு சில
நேரங்களில் ஏற்படும் கருத்து
மோதல் சுவையான கொஞ்சி
விளையாடும் கோபம் ரசிப்பு

காதல் ஜோடிகள் செல்லமாக
கொஞ்சி விளையாடும் நேரம்
சீண்டல் சிலேடை  காட்டம்
கோபத்திலும் ஈர்ப்பு துடிப்பு

சில சமயம் தவிர பல நேரம்
இயற்கை மனிதர்கள் மீது
காட்டுவதும்  தொடுப்பதும்  
விளையாட்டு கோபமே

வீட்டு மனிதர்கள் பழகிய
கிளி நாய் பூனை முயல்
மாடு இவைகளிடம் காட்டும்
கோபம் பொய் கோபமே "

தெய்வங்கள் கூட மனிதன்
மீது காட்டுவது கொஞ்சி
விளையாடும் கோபமே தவிர
விஷமோ விபரீதமோ அல்ல "

கொஞ்சி விளையாடும்
கோபமே ஆர்வம் ஈர்ப்பு
ஈடுபாடு வளர்ச்சி முதிர்ச்சி
காண வாழ்கையில் முதல்படி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com