கொஞ்சி விளையாடும் கோபம்: ஷஹி சாதிக்

தேகம் உருகிடும் 
மேகன் நீ.
தேய்ப்பதோ நான்
வெய்யிலென்  ஆயுதம்.

உனக்குள் உதிக்கையில்
உலகே மறக்கிறேன்.
உரங்கும் நொடியிலும்
உனை நான் நினைக்கிறேன்.

சுடராகப் பிறந்துவிட்டேன்...
எதிரெதிரே சந்திப்பு!
தொடுகையே இல்லாமல்
எந்நாளும் உதிப்பு!

நீ கொஞ்சும் குளிர்மை...
நானோ,
தீ!சுடுகிறேனோ!
தீண்டத்தான் நினைக்கிறேன்
தாங்காது உன் தேகம்!

என் விரல்களின்
சுடுகின்ற கோப இயல்பு...
உன்னைத்
தொடுகையில் அழுகிறாயோ?
வின்னைத் தொட
தொலைவதேன் நீயென,
கண்ணை மறைந்து 
தொலைவில் கிடந்தேன்!

இரவு பிறந்திருந்தது!
நான் கண் மறைந்ததாலோ?
உறவு நீ
கண் படாமல் 
துறவு போல ஓர் வாழ்க்கை
இரவு ஒன்று தான்,ஆனால்
யுகங்களின் கொடுமை...!

மீண்டும் கண் திறந்தேன்...
நீ இருளில் விழித்திருந்த 
மீது நான் உதித்தெழுந்தேன்...

நான் கொடுமையானவள்!
இன்று மென்மையோடு 
மோதிடும் போது நீ
உதிர்ந்துவிடுவாயோ?

நான் சினத்தினள்
பார்வையால் உனை
ஏன் உருத்த?
என் இயற்கை
உனக்குமா விலக்காகவில்லை...

நெருங்க நெருங்க
தூரச் செல்கிறாய்!
உன்னில் தொலைகிறேன்.
தூரல்களும் சாரல்களும்
என்னை வில்லால் தடுத்தன!

நான்
தூரக்கிடக்கும் போது
எண்ணி வெந்தவள்.
நீ மென்மையின் கொஞ்சல்.
என் எல்லையெல்லாம்
நீயாகி...

திரையாகிறாய்,
தீண்டினாலும்,
தினம் தாக்கினும்
என் சினம்,
மனம் ஏன்
தண்மை உனக்கு 
மட்டும்?

நான் 
அன்பினால் நெருங்க
சினம் தான்
அரவணைப்பாகிறது!
நான் சூரியப்பொட்டு
நெற்றியில் உன்.

என் 
ஆசைக்குள் உன்
அல்லல் !

என்
சிரிப்பிலும் கூட
மென்மை கானாயோ?

சுபாவம் இறந்துவிட்டால்
இயற்கை என்செய்யும்?
பாவம் இயற்கை என்று
இருப்பு எதோ அதுவாய்க் கிடந்தே...

தனியாமல் எரிகிறேன்!
சுவாலையால் உருக்கினேனோ?
தவிப்போடுகிடக்கிறேன்...
பார்வையேனும் வாழட்டுமென்று...

கொஞ்சலாய்ப் பார்க்கிறேன்.-நீ
அஞ்சிடும் பார்வை எனக்கு!
நெஞ்செலாம் தாபம்,
மிஞ்சலே மீண்டும் 
நெஞ்சில்...எரிகிறபோது உன்
கொஞ்சலைக் கேற்கிறேன்!

நீ 
நீங்கிச் செல்கிறாய் 
தீ 
தாங்கிக்கொள்கிறேன்!
நீ
சாரலால் கொல்கிறாயோ?

உன் 
குளிர்ச் சினத்தில்
புன்னகைக்கிறேன்!
எனக்கதனைக் கொஞ்சலாய்
புனைந்துகொண்டேன்.

குளிர்க்கோபம்.
எனக்குள் சமநிலையாகிறது.
துளி கூட
எட்டிப்பிடித்து வானவில்லாய்
ஜொலிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com