கொஞ்சிவிளையாடும் கோபம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

விஞ்சுபுகழ்  தமிழினத்தை ;  ஞாலம்  மூத்த            வீறார்ந்த  தமிழ்மொழியைக்  காப்பே  னென்றுவஞ்சினம்தான்  கூறுதற்கும்   வீரத்  தோடே            வாழ்வதற்கும்  சினம்நம்முள்  இருக்க  வேண்டும்கிஞ்சித்தும்   சொரணையின்றி  இருப்போன்  தன்னைக்            கீழோனாய்த்  தானனைவர்  தூற்று  வார்கள்கொஞ்சமுமே  மானத்தோ  டிருப்ப  தற்குக்            கொண்டிருக்க  வேண்டும்நாம்  சினத்தை  நெஞ்சுள் !கண்முன்னே  நடக்கின்ற  கயமை  தன்னைக்            கண்டிக்க  வாரானைப்  பேடி  யென்பர்கண்முன்னே  அரசியலார்   செயும்வன்  மத்தைக்            கண்டிக்கத்   துணியானைக்  கோழை  யென்பர்கண்முன்னே  ஆட்சியாளர்  செய்யும்  கேட்டைக்            கண்டிக்க   முயலானை   வீண  னென்பர்மண்மீதில்  தவறுகளை  எதிர்ப்ப  தற்கே            மனத்திற்குள்  கோபம்தான்  பொங்க  வேண்டும் !நல்லவைகள்  நடப்பதற்கும் ;  முன்னேற்  றத்தில்            நம்நாட்டை  உயர்த்துதற்கும்   காப்ப  தற்கும்புல்லரினை   வீழ்த்துதற்கும்   கொஞ்சும்  கோபம்            புலன்களிலே  கொஞ்சமேனும்   இருக்க  வேண்டும்புல்லுதற்கும்   மனைவிமீது   ஊடல்  தன்னைப்            புறத்தினிலே   சிறிதாகக்  காட்டும்  போதேவெல்கின்ற   காமத்தில்   கூடு  மின்பம்            வெற்றிகளின்  அடத்தளமும்  அதுவே  யன்றோ !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com