செப்பல புலுசு

சுவையான செப்பல புலுசு
செப்பல புலுசு


தேவையானவை:
மீன் துண்டுகள் -8
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் -4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி
வெங்காயம் -4
பச்சைமிளகாய் -5
இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிது
பொடி செய்ய தேவையான பொருட்கள்
தனியா - 4 தேக்கரண்டி
ஜீரகம் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 4

செய்முறை:
மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.  பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அவை வதக்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றவும். குழம்பு நன்கு கொதிக்கும் வரை மூடி வைக்கவும். குழம்பு நன்கு கொதித்தவுடன்

அதில் மீன் துண்டுகளையும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு மீண்டும் மூடவும். குழம்பு நன்கு கொதித்ததும் கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான சாப்பல புலுசு ரெடி.
•••

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com