ஐந்து இலை ரசம்

முதலில் இலைகளைத் தவிர மற்ற பொருள்களை சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு மணம் வரும் வரை வறுத்து எடுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஐந்து இலை ரசம்

தேவையானவை:

வாத நாராயண இலை, முசுமுசுக்கை இலை,
விருவாட்சி இலை, தூதுவளை, துத்தி  - தலா ஒரு கைப்பிடி
மிளகு, சீரகம், தனியா - தலா ஒரு தேக்கரண்டி
சுக்கு - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் வற்றல் - 1
தாளிக்க - தே.எண்ணெய், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6 உரித்தது.

செய்முறை:

முதலில் இலைகளைத் தவிர மற்ற பொருள்களை சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு மணம் வரும் வரை வறுத்து எடுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து முதலில் அரைத்த கலவையுடன் சேர்த்து நன்றாக மறுபடியும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

உரித்த சின்ன வெங்காயத்தை நன்றாகத் தட்டி எடுத்துக் கொண்டு, வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தையும் தாளித்து, அரைத்த கலவையுடன் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி தேவையான அளவு ஆற வைத்து அருந்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com