தேவையானவை:
உதிரியான சாதம் - ஒரு கிண்ணம்
மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி
நெய் - மூன்று தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு, கடுகு - தேவைக்கேற்ப
செய்முறை:
மிளகை நன்றாக நெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், சாதம், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.