கீரை கட்லெட்

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரை கட்லெட்

தேவையான பொருள்கள்:

(சிறுகீரை, அரைக் கீரை, மூளைக் கீரை, பாலக்கீரை)
ஏதாவது ஒரு கீரை - அரை கட்டு
உருளைக் கிழங்கு - 2
மைதா மாவு - 5 தேக்கரண்டி
மேரி கோல்ட் பிஸ்கட்  தூள் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

பின்னர், மசித்த உருளைக்கிழங்கு, கீரை, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடைமாவு போன்று பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்பு, மைதா மாவில் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து கொள்ளவும். ஒரு தட்டில் பிஸ்கட் தூளை வைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து வடை போன்று தட்டையாக தட்டி, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து, பிஸ்கட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
பின்னர், தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கீரைக் கட்லெட் தயார்.  கீரையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் கீரை கட்லெட்டை விரும்பி உண்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com