பன்னீர் புலாவ்

வெங்காயத்தினை நீளமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். புதினா மற்றும் மல்லித்தழையினை பொடியாக நறுக்கவும்.
 பன்னீர் புலாவ்

தேவையானவை:

பன்னீர் - 10-15 சிறிய துண்டுகள்
பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய்  2
பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
புதினா, மல்லித்தழை - சிறிதளவு
தேங்காய் பால் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் (அ) நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
சோம்பு - கால் தேக்கரண்டி(முதலில் தாளிக்க)

செய்முறை:

வெங்காயத்தினை நீளமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். புதினா மற்றும் மல்லித்தழையினை பொடியாக நறுக்கவும்.

பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பாசுமதி அரிசியினை தண்ணீரில் கழுவி 5-10 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். பின்பு குக்கரில் எண்ணெய்  அல்லது நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய புதினா, மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர், பாஸ்மதி அரிசி, அரை கிண்ணம் தேங்காய்ப் பால், ஒன்றரை கிண்ணம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும் (தேங்காய்ப் பால் அதிகம் சேர்க்க தேவையில்லை). பின்னர், குக்கரில்  பிரஷர் அடங்கியதும் எடுத்து பரிமாறவும். சுவையான பன்னீர் புலாவ் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com