கோதுமை வெஜ்ரோல்

கோதுமை வெஜ்ரோல்

தேவையான பொருட்கள்:
கோஸ் - 100 கிராம்
காரட் - 2
உருளை கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
சோம்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்  தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
கரம் மசாலா - 1தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் , எண்ணெய் } தேவைக்கேற்ப
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: காய்கறிகளை கழுவி துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அடிபிடிக்காதப்  பாத்திரத்தில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பை அதில் சேர்க்கவும்.

துருவிய காய்களைப் போட்டு லேசாக வதக்கவும்.

இப்போது எல்லா பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றி மசாலா

கலவை சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விடலாம்.

ரோல் செய்ய:

கோதுமை - 1 கிண்ணம்
வெங்காயம் - 2
துருவிய காரட் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  பின்னர், செய்து வைத்துள்ள காய்கறி மசாலா கலவையைச் சப்பாத்தியின் நடுவில் வைத்து, அதன் மேல்  பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட்,  1துளி எலுமிச்சம் பழச்சாறு (ஒரு சப்பாத்திக்கு இந்த அளவு) தூவி, சப்பாத்தியை ரோல் செய்து. ஓரங்களை தண்ணீர் தொட்டு மூடி ஒட்டிவிடவும். பின்னர், சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.


பின்னர்,  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்  சப்பாத்தி துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கோதுமை வெஜ்ரோல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com