அத்திக்காய் பருப்புசிலி

அத்திக்காய் பருப்புசிலி

தேவையானவை:

பிஞ்சு அத்திக்காய் - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1கிண்ணம்
கடலைப் பருப்பு - 1கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்  - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும்  அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து  மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அத்திக்காயை ஒவ்வொன்றாக இடித்து பிளந்து  தண்ணீரில் போட்டு  அலசிவிட்டு சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.  

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அரைத்த பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பருப்பு உதிராக ஒட்டாதப் பதத்தில் வந்ததும் வேக வைத்துள்ள அத்திக்காயைச் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும். அத்திக்காய் பருப்புசிலி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com